“ஓ சுகுமாரி”படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபர்ஸ்ட் லுக்
அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் தெலுங்கு இளம் நடிகர் வீர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் “ஓ…!சுகுமாரி”. பேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் தாமினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் லுக்கை பட குழு நேற்று வெளியிட்டது.
Next Post