தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் அவரது அல்லு சினிமாஸ் நிறுவனத்திற்காக உருவாகும் சிறப்பு விளம்பர படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்த விளம்பர படத்தை இயக்குநர் கௌதம் நாயுடு இயக்கியுள்ளார். உயர்தரமான சினிமா தரத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த விளம்பர படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள அல்லு சினிமாஸ் நிறுவன பிரமோஷனுக்காக இந்த விளம்பர படம் உருவாக்கப்பட்டுள்ளது. புஷ்பா படத்தின் மூலமாக உலக அளவில் பிரபலமாகி இருக்கும் அல்லு அர்ஜுன் தற்போது அட்லி இயக்கத்தில் பிரம்மாண்ட படத்தில் நடித்துக் கொண்டிருக் கிறார்.இந்தப் படத்தை தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் புஷ்பா-3 படத்தில் நடிக்க உள்ளார்.
Next Post