ராஜாசாப்- விமர்சனம்
பிரபாஸின் பாட்டி ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது கணவரான சஞ்சய் தத் காணாமல் போய்விடுகிறார். இதனால் மறதி வியாதியால் அவரது பாட்டி அவதிப்படு கிறார். அவரை குணப்படுத்த காணாமல் போன தாத்தா சஞ்சய் தத்தை தேடி செல்கிறார் பிரபாஸ். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் பிரபாஸுக்கு தெரிய வருகிறது. இதனிடையே பிரபாஸை ரிதி குமார், நிதி அகர்வால், மாளவிகா மோகனன் என மூவரும் மாறி மாறி காதலிக்கின்றனர். இறுதியில் என்ன நடந்தது? என்பதை படத்தின் மீதி கதை.
பிரபாஸ் தனது நடிப்பு மற்றும் தோற்றத்தால் அனைவரையும் கவர்வார்.சஞ்சய் தத் கேரக்டர் சர்ப்ரைஸாக இருக்கும். ஹீரோயின் மூன்று பேரும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்துள்ளனர். ஒரு சில இடங்களில் விடிவி கணேஷ் சிரிக்க வைத்துள்ளார். பாட்டியின் இள வயது தோற்றத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார். கடைசி 30 நிமிடங்கள் மற்றும் கிளைமாக்ஸ் படத்திற்கு பலம். ஃபேண்டஸி,ஹாரர், காமெடி கலந்த படமாக இதை இயக்குனர் மாருதி இயக்கி உள்ளார். இருப்பினும் பிரபாஸ் போன்ற மிகப்பெரிய நடிகரை இன்னும் சரியாக பயன்படுத்தி இருக்கலாம்.படத்தில் சில போரிங்கான காட்சிகள் மற்றும் நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் ரசிக்கும் படியாக இருந்திருக்கும். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு மற்றும் தமனின் இசை ரசிக்க வைக்கிறது.