50வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்
இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேசியது, சினிமாவில் 50 ஆண்டுகள் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.16 வயதினிலே படத்தில் எனக்கு முதல் முறையாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.என் குருநாதர் பாரதிராஜாவுக்கு நன்றி. துணை இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், பின்பு நடிகர் என படிப்படியாக வந்தேன். முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்த பிறகு இரண்டாவது படமான கன்னி பருவத்தில் வில்லனாக நடித்தேன். பிறகு இயக்குனராக அறிமுகமானேன். அடுத்து ஒரு வெப் தொடரும், ஒரு படமும் இயக்குவ தற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.
Prev Post
Next Post