மிரள வைத்த ‘டிமாண்டி காலனி 3’ பர்ஸ்ட் லுக்
அஜய் ஞானமுத்து அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி’ மற்றும் ‘டிமாண்டி காலனி 2’படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது.முந்தைய இரண்டு பாகங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ‘டிமாண்டி காலனி3’ படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்துள்ள இந்த படத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். கோடை விடுமுறைக்கு படம் வெளியாக உள்ளது.
Next Post