100 கோடி கிளம்பில் நிவின் பாலி
அகில் சத்யன் இயக்கத்தில்,நடிகர் நிவின் பாலி நடித்துள்ள ’சர்வம் மாயா’ என்ற திகில் நகைச்சுவை படம் கடந்த 25-ம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவிக்க துவங்கியது. அதோடு வெளியான மோகன்லாலின் விருபாஷா படத்தை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. கடந்த ஒரு வாரத்தில் இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடிகர் நவீன் பாலி 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார். இதில் ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். பயர்பிளை பிலிம்ஸ் மற்றும் அகில் சத்யன் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
Next Post