Take a fresh look at your lifestyle.

விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் புதிய சாதனை

163

விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் புதிய சாதனை
எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை 6.45 மணி அளவில் யு டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வெளியானது. டிரைலரில் விஜயின் அனல் பறக்கும் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் டிரைலரை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளை சேர்த்து ‘ரியல் டைம்’ பார்வைகளாக 46 மில்லியனைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘தி கோட்’ படத்தின் 24 மணி நேர டிரைலர் சாதனையான 39 மில்லியன் சாதனையை ‘ஜனநாயகன்’ முறியடித்துள்ளது. இன்ஸ்டா கிராம் தளத்தில் 26 மில்லியன் பெற்றுள்ளது. நேற்று மாலை 5 மணி வரை யு டியூப்பில் தமிழில் 30 மில்லியன், தெலுங்கில் 6 மில்லியன், ஹிந்தியில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.24 மணி நேரத்தில் 50 மில்லியனை கடந்து விடும் என தெரிகிறது.