Take a fresh look at your lifestyle.

கங்காவாக கலக்கும் நயன்தாரா

154

கங்காவாக கலக்கும் நயன்தாரா
நடிகை கீதுமோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்து வரும் படம் டாக்ஸிக். இது அவரின் 19-வது படமாகும். இதில் ஹீரோயின்களாக நயன்தாரா,கியாரா அத்வானி, ஹீமா குரோஷி, ருக்மினி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. வரும் மார்ச் மாதம் 19-ந் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனிடையே ஹீரோயின்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கியாரா அத்வானி மற்றும் ஹீமா குரோஷி ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், நடிகை நயன்தாராவின் தோற்றத்தை நேற்று பட குழு வெளியிட்டது. இதில் கங்கா என்ற கேரக்டரில் நயன்தாரா கலக்கல் ஆக நடித்துள்ளார்.