Take a fresh look at your lifestyle.

ரூ 75 கோடியில் உருவாகும் சூரி படம்

156

ரூ 75 கோடியில் உருவாகும் சூரி படம்
நடிகர் சூரி முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் தற்போது நடித்து வரும் படம் மண்டாடி. இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார் தமிழ்,தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்த படத்தை ரூ.75 கோடி பட்ஜெட்டில் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்காக சூரி பல மாதங்கள் கடுமையாக பயிற்சிகள் மேற்கொண்டார். சர்வதேச ஆக்ஷன் நிபுணர்களுடன் சேர்ந்து சண்டை காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் அமைத்துள்ளார். சுமார் 60 நாட்கள் படத்தில் பணியாற்றியுள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையக்கிறார். 2026 கோடை விடுமுறையில் படம் ரிலீஸ் ஆக உள்ளது.சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் சூரி மற்றும் படக்குழுவினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.