மலேசியாவில் இன்று ஜனநாயகம் பட இசை வெளியீட்டு விழா
அரசியல் பேசுவாரா விஜய்? உலகமே உற்று நோக்கும் முக்கிய நிகழ்ச்சி
ஒரு லட்சம் ரசிகர்கள் பங்கேற்கின்றனர்
முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கே வி என் மீடியா பிரம்மாண்டமாக படத்தை தயாரித்துள்ளது.
அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ ஆகிய பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நேற்று மாலை படத்தின் மூன்றாவது பாடலான செல்ல மகளே பாடல் விஜய் குரலில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

அதோடு இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று 27ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் அனிருத் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாடகர்கள் மேடையில் விஜய் பட பாடல்களை லைவாக பாட உள்ளனர்.

மியூசிக் கான்செட் போல நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவை பார்ப்பதற்கு ஒரு லட்சம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஸ்டேடியத்தில் நடைபெறுவதால் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மலேசியா அரசு செய்துள்ளது. அதோடு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைக ளை பிறப்பித்துள்ளது.சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி- சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்து இருக்கிறது.

இருப்பினும் விழாவில், விஜய் அரசியல் தொடர்பாக பேசுவதற்கு அதிக வாய்ப்பிருப் பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ ஆகிய மூவரும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் மற்றும் அவரது சோபா சந்திரசேகர் மலேசியா சென்றுள்ளனர். அதோடு பிரபல பின்னணி பாடகர்களும் கோலாலம்பூர் சென்று விட்டனர். இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெறும் விழாவில் ஜனநாயகன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகிறது. இப்படத்தில் டிரெய்லர் வரும் 2026 ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள இப்படத் திற்கான வெளிநாட்டு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
