Take a fresh look at your lifestyle.

குழந்தைகளை கவர வரும் ‘கிகி & கொகொ ’

171

குழந்தைகளை கவர வரும் ‘கிகி & கொகொ ’

குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படமாக ‘கிகி & கொகொ படம் உருவாகியுள்ளது. இதை அறிமுக இயக்குநர் பி. நாராயணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை இனிகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதன் டீசர் வெளியீட்டு விழா நடந்தது.இதில் இனிகா புரொடக்‌ஷன் தலைமை செயல் அதிகாரி மீனா, வி எஃப் எக்ஸ் ஸ்பெஷலிஸ்ட், கிரியேட்டிவ் புரொடியூசர் ஜி.எம். கார்த்திகேயன், இசையமைப்பாளர் சி. சத்யா,புரொடக்‌ஷன் ஹெட் சிவராஜ்,குழந்தை நட்சத்திரம் ஸ்ரீனிகா மற்றும் இயக்குனர் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.படம் பற்றி இயக்குநர் பி.நாராயணன் இயக்கி யுள்ள, அனிமேஷன் படம். ‘கிகி அண்ட் கொகொ’. இந்தப் படம் பற்றி அவர் கூறும்போது, “இது இந்தியாவின் முதல் அனிமேஷன் படம். கிகி என்ற அன்பான செல்லப் பிராணிக்கும் கொகொ என்ற சிறுமிக்கும் இடையிலான அழகான கதையை இந்தப் படம் சொல்கிறது.