Take a fresh look at your lifestyle.

5 மில்லியனை கடந்த சிக்மா’ பட டீசர்

62

5 மில்லியனை கடந்த சிக்மா’ பட டீசர்
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள படம் சிக்மா.இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். தற்போது படத்தின் டீசர் வெளியாகி புதிய உச்சமாக 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.இந்த மைல்கல் குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறியது, “’சிக்மா’ படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. இந்த படத்தின் மீது நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது என்றார்.