Take a fresh look at your lifestyle.

அவதார்-3 படத்தை பார்த்து விட்டு ராஜமௌலி என்ன செய்தார் தெரியுமா?

193

அவதார்-3 படத்தை பார்த்து விட்டு ராஜமௌலி என்ன செய்தார் தெரியுமா?
ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படம் 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி இருவரும் இணைந்து ‘அவதார்’ படம் பற்றி கலந்துரையாடினர். காட்சிகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விரிவாக்கி உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தை பார்த்த போது திரையரங்கில் தான் ஒரு குழந்தையைப் போல குதூகலித்ததாக ராஜமெளலி கூறினார். ஹைதராபாத்தில் உள்ள ஐமாக்ஸில் ’அவதார்’ திரைப்படம் ஒரு வருடம் ஓடியது என்ற நினைவுகளையும் பகிர்ந்தார், பெரிய திரை அனுபவங்களுக்கு ’அவதார்’ திரைப்படம் ஒரு மைல்கல் என்றும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை பாராட்டினார்.