Take a fresh look at your lifestyle.

தாவூத்- விமர்சனம்

80

தாவூத்- விமர்சனம்
பிரபல தாதாவான தாவூத்தின் போதை பொருட்கள் சென்னைக்கு வருகிறது.இதை சப்ளை செய்வதில் தாதாக்கள் சாய்தீனா, அபிஷேக் ஆகியோருக்கிடையே மோதல் உருவாகிறது. இதனால் புதியவர் ஒருவரை வைத்து பொருளைக் கடத்த அபிஷேக் திட்டம் போடுகிறார். இதற்காக டாக்ஸி டிரைவரான லிங்காவை தேர்ந்தெடுக்கிறார். அந்தத் திட்டத்தை முறியடித்து லிங்காவிடமி ருந்து போதை பொருளை கடத்த நினைக் கிறார் சாய்தீனா. அவர்களுக்கிடையே நடக்கும் ஆட்டம்தான் மீதி கதை. மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பேரை வைத்து வில்லன் யார் என்றே காட்டாமல் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் ஆக்சன் படத்தை கொடுத்து உள்ளார் இயக்குனர் பிரசாந்த் ராமன். லீட் ரோலில் நடித்துள்ள லிங்கா வாடகை கார் டிரைவராகவும், அதேநேரம் கிளைமாக்ஸில் முக்கியமான சுவிட்சாகவும் மாறுகிறார். அவருடைய நண்பராக காமெடி கலந்த நடிப்பை கொடுத்துள்ளார் சாரா. போலீசாருக்கு தண்ணி காட்டும் தாதா தாவூத்தாக வத்திகுச்சி திலிபன்
மிரட்டி உள்ளார். பல்வேறு கெட்டப்புகளில் வந்து சாரா ஆச்சர் ரசிக்க வைக்கிறார்.போலீஸ்
அதிகாரியாக ராதாரவி, ஜெயக்குமார் ஆகியோர் நடிப்பு யதார்த்தமாக உள்ளது. படத்திற்கு பிரேண்டன் சுஷாந்தின் ஒளிப்பதிவு,ராக்கேஷ், அம்பிகாபதியின் இசை ஓகே ரகம்.