Take a fresh look at your lifestyle.

குழந்தைகள் பாதுகாப்பில் கீர்த்தி சுரேஷ்

171

குழந்தைகள் பாதுகாப்பில் கீர்த்தி சுரேஷ்
யுனிசெப்பின் குழந்தைகள் நலத்திற்கான தேசிய தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைக ளுக்கான யுனிசெப் தூதராக இணைவது எனக்கு பெருமையாக உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாகவும், தன்னம் பிக்கையுடனும் வளர வேண்டும். கடந்த 76 ஆண்டுகளாக இதற்காக உழைத்து வரும் யுனிசெப்பின் பணியில் ஈடுபடுவது எனக்கு பெரும் பொறுப்பாக இருக்கிறது என்றார். அதேபோல் குழந்தைகளுக் கான கல்வி மற்றும் ஆரோக்கியம்,பாதுகாப்பு ஆகியவற் றில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய பங்கு வகிக்கிறார் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.