Take a fresh look at your lifestyle.

முனீஷ்காந்துக்கு ஜோடியாக நடித்தது ஏன்? விஜயலட்சுமி விளக்கம்

35

முனீஷ்காந்துக்கு ஜோடியாக நடித்தது ஏன்? விஜயலட்சுமி விளக்கம்
இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கி உள்ள படம் ‘மிடில்கிளாஸ்’. இதில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தேவ், கே.வி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். இம்மாதம் வெளியாக உள்ள இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயலட்சுமி கூறியது, தஞ்சாவூரில் உள்ள ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் எங்களுடையது. நான் முனீஷ்காந்த்தின் மனைவியாக நடித்துள்ளேன். நான் எப்போதும் படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து நடிப்பதில்லை. கதையை பார்த்துதான் நடிக்க சம்மதிப்பேன். கேரக்டர் சரியாக இருந்து கதை சரியில்லை எனில் மொத்த படமும் வீணாக போய்விடும்.
அதுபோல் படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்ன போது நான் எதிர்பார்த்த கதை அமைந்திருந்தது. எனவே படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன் என்றார்.