ஜனநாயகன் பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டடோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் மீடியா தயாரித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையே, ‘ஜன நாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கச்சேரி’ எனத் தொடங்கும் பாடல் ‘தளபதி நேற்று மாலை 6.03-க்கு வெளியானது. இப்பாடலை விஜய் பாடியுள்ளார். அவரது குரலில் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.