பிரித்விராஜ் கேரக்டர் போஸ்டரை வெளியிட்ட ராஜமௌலி
பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் குளோப் டிராட்ர். இதில் வில்லன் கேரக்டரில் பிரித்திவிராஜ் சுகுமாரன் நடிக்கிறார். இந்த படத்தில் இருந்து பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள கும்பா கேரக்டரின் போஸ்டர் வெளியிடப்பட் டுள்ளது.இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் முதல் அம்சமாக, வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. போஸ்டரில் அவர் ஒரு ஹைடெக் வீல் சேரில் அமர்ந்தபடி இருக்கும் லுக் புதிய நியூ ஏஜ் வில்லனாக அவரை காட்டுகிறது. இந்த படம் வரும் 15ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக துவங்குகிறது.
Prev Post