Take a fresh look at your lifestyle.

றெக்க றெக்க.. பாடல் றெக்க கட்டி பறக்குது

53

றெக்க றெக்க.. பாடல் றெக்க கட்டி பறக்குது
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பைசன் காளமாடன்’.
இதில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்ளாஸ் என்டர்டெயின் மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கடந்த 1-ம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் ‘தீக்கொளுத்தி’ வெளியாகி இருந்தது. தற்போது 2வது பாடலான ‘றெக்க றெக்க’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பாடகர்கள் வேடன் மற்றும் அறிவு இணைந்து பாடி உள்ளனர். தீபாவளி வெளியீடாக இந்தப் படம் வெளியாகிறது.