Take a fresh look at your lifestyle.

டீசல் படத்துக்காக மீன்பிடி படகு ஓட்டிய ஹரீஷ் கல்யாண்

36

டீசல் படத்துக்காக மீன்பிடி படகு ஓட்டிய ஹரீஷ் கல்யாண்
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள படம் ‘டீசல்’.இதில் ஹீரோயினாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது. படம் பற்றி சண்முகம் முத்துசாமி கூறியதாவது:-
பெட்ரோல், டீசலுக்கு பின்னணியில் உள்ள அதிர்ச்சியான சம்பவங்களை மையமாக கொண்டு ‘டீசல்’ படம் உருவாகி இருக்கிறது. படத்தில் ஹரீஷ் கல்யாண் ஃபிஸ்ஷர்மேன் கேரக்டரில் நடித்துள்ளார்.இதற்காக அவர் கடலில் மீன்பிடி படகு ஓட்டுவதற்கு காசிமேடு கடற்கரையில் பயிற்சி எடுத்தார். இதற்காக பழவேற்காடு பகுதியில் பிரமாண்ட ‘செட்’ போட்டு 40 நாட்கள் கடலுக்குள் படப்பிடிப்பு நடத்தினோம் என்றார்.