விஜய் தேவரகொண்டாவுக்கு வில்லனாகும் ராஜசேகர்
அதிரடி ஆக்சன் படங்கள் மூலம் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த தெலுங்கு நடிகர் ராஜசேகர், வில்லன் கேரக்டரில் மீண்டும் கம்பேக் கொடுக்கிறார். விஜய் தேவரகொண்டா – கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள படம் ரவுடி ஜனார்தன். கிராமிய பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் ராஜசேகர் நடிக்கிறார். இதில் ஹீரோவை ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு ராஜசேகர் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது.
இது தவிர தமிழில் வெளியான லப்பர் பந்து படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் தினேஷ் நடித்த கேரக்டரில் ராஜசேகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Next Post