Take a fresh look at your lifestyle.

நடிகை சிம்ரனின் புதிய ரூட்

47

நடிகை சிம்ரனின் புதிய ரூட்
90களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை சிம்ரன், திருமணத்துக்கு பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கிய அவர்,நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன டூரிஸ்ட் பேமிலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில்
முதன்முறையாக தயாரிப்பாளராக களம் இறங்க இருக்கிறார் சிம்ரன். அறிமுக
இயக்குனர் ஷியாம் இயக்கத்தில் ஆக்சன்,
திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை தயாரிப்பதுடன், அதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவும் இருக்கிறார். படத்தில் அவருடன் தேவயானி, ஆனந்தராஜ், நாசர்
உள்பட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பிற்கான முதற்கட்ட பணிகளில் சிம்ரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.