Take a fresh look at your lifestyle.

தணல்-விமர்சனம்

55

தணல்-விமர்சனம்
அதர்வா,சாரா, பாரத், சர்வா உள்ளிட்டோர் போலீஸ் கான்சபலாக தேர்வாகி பணியில் சேர்வதற்காக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு வருகின்றனர். ஆர்டர் வழங்கும் இன்ஸ்பெக்டர் இல்லாததால் ரோந்துக்கு செல்லுமாறு எஸ்ஐ சொல்கிறார். இதனால் இரவு ரோந்துக்கு செல்கின்றனர்.
அப்போது கழிவுநீர் கால்வாயில் இருந்து திடீரென மர்ம நபர் ஒருவர் வெளியே
வருகிறார். அவரை பிடிக்க அதர்வா விரட்டிக் கொண்டு செல்லும்போது ஒரு குடிசை பகுதியில் பதுங்கி விடுகிறார். அங்கு வரும் அதர்வா உள்ளிட்ட காவலர்களை அஸ்வின் மற்றும் அவரது ஆட்கள் தாக்கி கொலை செய்கின்றனர்.போலீசாரை அஸ்வின் கொலை செய்வதற்கான பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை. கான்ஸ்டபிள் கேரக்டரில் ஆக்சன் ஹீரோவாக அதர்வா கலக்கியுள்ளார். அதர்வா காதலியாக வரும் லாவண்யா திரிபாதி அழகான நடிப்பை தந்துள்ளார். நெகட்டிவ் கேரக்டரில் அஸ்வின் மிரட்டி உள்ளார். கொள்ளை, விவசாய நிலங்கள் அழிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு திரில்லர் பாணியில் படத்தை விறுவிறுப்பாக ரவீந்திர மாதவா இயக்கி இருக்கிறார் . ஜஸ்டின் பிரபாகர் இசை சக்தி சரவணன் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.