Take a fresh look at your lifestyle.

100 கோடி கிளப்பில் கல்யாணி பிரியதர்ஷன்

36

100 கோடி கிளப்பில் கல்யாணி பிரியதர்ஷன்
துல்கர் சல்மான் தயாரிப்பில், டோமினிக் அருண் இயக்கத்தில்,கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா அத்யாயம்-1 படம் சூப்பர்ஹீரோ கதையாக உருவாகி கடந்த வாரம் வெளியானது.எதிர்பாராத அளவிற்கு லோகாவுக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்து வருகிறது.மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள ‘லோகா’ திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் தமிழகத்திலும் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 100 கோடி கிளப்பில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இணைந்துள்ளார்.