Take a fresh look at your lifestyle.

தெலுங்கு படங்கள் 1000 கோடி வசூல் செய்வது குறித்து எஸ் கே சொன்ன தகவல்

42

தெலுங்கு படங்கள் 1000 கோடி வசூல் செய்வது குறித்து எஸ் கே சொன்ன தகவல்:
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி உள்ள படம் மதராசி. இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 5-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதையொட்டி பட புரமோஷன் நிகழ்ச்சி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஐதராபாத்தில் நடந்த விழாவில் சிவகார்த்திகேயன்,ருக்மணி வசந்த், முருகதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.அப்போது சிவகார்த்திகேயன் பேசியது,சிரஞ்சீவி, மகேஷ்பாபு படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து வேலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். போன்ற தெலுங்கு படங்கள் ரூ.1000 கோடி வசூல் சாதனையை அசால்டாக செய்தன.பல விமர்சனங்களை கடந்து தெலுங்கு படங்கள் வசூலில் சாதித்து வருகின்றன. தொடர்ந்து தெலுங்கு படங்கள் ரூ.1000 கோடி வசூல் செய்வதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள் தான். ஒரு கண்டன்ட்டை நம்பி அதில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து பிரம்மாண்டமாக படம் எடுக்கின்றனர் என்றார்.