Take a fresh look at your lifestyle.

பாம் பட இயக்குனர்

42

பாம் பட இயக்குனர் குசும்பு பிடித்தவர்

பார்த்திபன் கல கல… இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாம். இதில் சிவாத்மிகா ஹீரோயினாக நடிக்க, காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். கெம்பிரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த படம் வரும் 12-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இதன் பாடல்,டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன்,‘பாம்’ படத்தின் டைட்டிலை தேர்வு செய்த விஷால் வெங்கட் பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். அதனால் நானும் வாயு பகவானை வணங்கி விட்டு பேச்சை தொடங்குகிறேன் என கலகலப்பாக பேசி ரசிகர்களை கவர்ந்தார்.