மீண்டும் இணைந்த 96 ஜோடி
விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் அவர்களது இளம் வயது கேரக்டர்களாக நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிஷன் இருவரும் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தை ராஜ்குமார் ரங்கசாமி இயக்குகிறார். ஆர்ஜின் ஸ்டூடியோஸ் கண்ணதாசன் தயாரிக்கும் இந்த படத்தில் கே.பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சென்னை, பாண்டிச்சேரி,நாமக்கல் மற்றும் கோவா ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது.
Prev Post
Next Post