Take a fresh look at your lifestyle.

ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் பிக் பாஸ் வர்ஷினி

42

ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் பிக் பாஸ் வர்ஷினி
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்கும் பலர் சினிமாவுக்கு வருகிறார்கள். ஹீரோயின், மற்ற வேடங்களில் நடிக்கிறார்கள். அந்த வகையில் வர்ஷினி வெங்கட்டும் ஹீரோயின் ஆகியுள்ளார். ‛சொட்ட சொட்ட நனையுது’ என்ற படத்தில் ரீல்ஸ் மீது அதிக மோகம் கொண்டவராக, ரீல்ஸ் பைத்தியமாக நடித்துள்ளார். வழுக்கை தலை காரணமாக பெண் கிடைக்காமல் அல்லாடுகிறார் ஹீரோ நிஷாந்த் ரூசோ. விக் வைத்து மறைத்து வர்ஷினியை திருமணம் செய்ய கணக்கு போடுகிறார். அடிக்கடி ரீல்ஸ் போடுவதை வாடிக்கையாக வைத்துள்ள வர்ஷினி திருமணத்துக்கு முந்தைய சடங்குகளை கூட ரீல்ஸ் போட்டு மாப்பிள்ளை வீட்டாரை கோபப்படுத்துகிறார். அந்த திருமணம் நடந்ததா? வழுக்கை தலை விவகாரம் வெளியில் தெரிந்ததா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.