Take a fresh look at your lifestyle.

கயல் சந்திரன் நடிக்கும் சிங்கா

118

கயல் சந்திரன் நடிக்கும் சிங்கா
மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும் கொண்ட குடும்பக் கதையாக உருவாகி இருக்கும் படம் சிங்கா. இந்த படத்தை இயக்குநர்கள் வசந்த், சற்குணம் ஆகியோரிடம் பணியாற்றிய ராஜா துரை சிங்கம் இயக்குகிறார். இதில் கயல் சந்திரன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் சிஜா ரோஸ், மீனாட்சி, ஆதித்யா கதிர், அரிஸ்டோ சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.இவர்களுடன் சிங்கா எனும் லாப்ரடார் நாய் முக்கியமான ரோலில் நடிக்கிறது. ருத்ரம் சினிமாஸ் தனது முதல் படைப்பாக இதை தயாரிக்கிறது.இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைக்க, அசோக் குமார்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.