Take a fresh look at your lifestyle.

17 மில்லியன் பேர் ரசித்த விஸ்வம்பரா பட காட்சி

103

17 மில்லியன் பேர் ரசித்த விஸ்வம்பரா பட காட்சி
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது வசிஷ்டா இயக்கத்தில் விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த நிலையில் சிரஞ்சீவியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் விஸ்வம்பரா படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் (வீடியோ) காட்சியை படக்குழு வெளியிட்டது. சிரஞ்சீவி சூலாயுதத்தை ஏந்தியபடி நிற்கும் காட்சிகள் வீடியோவாகவும், புகைப்படங்களா கவும் வெளியாகி வைரலாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்த வீடியோ ஒரே நாளில் 17 மில்லியன் பார்வைகளை இணையத்தில் கடந்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.