Take a fresh look at your lifestyle.

பாலிவுட் குறித்து மதுபாலா வேதனை

118

பாலிவுட் குறித்து மதுபாலா வேதனை
கண்ணப்பா படம் மூலம் சினிமாவுக்கு கம் பேக் கொடுத்துள்ள நடிகை மதுபாலா, ஸ்வீட் காரம் காபி என்ற வெப்பு தொடரிலும் நடித்துள்ளார்.அதோடு வேறு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்நிைலயில் தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் பாலிவுட்டில் சந்தித்த கேலி- கிண்டல் குறித்து அவர் கூறியது, தென்னிந்திய கலைஞர்கள் என்றாலே பாலிவுட்டில் கேளி- கிண்டலை எதிர்கொள்ளாதவர்கள் இருக்க முடியாது.அந்த காலகட்டத்தில் நாங்கள் சந்தித்த பிரச்சனைகளால் எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அவர்களது கேலிக்கு எங்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதனால் தான் இந்தி பேச, எழுத கற்றுக் கொண்டேன். ஆனால் இப்போது அந்த நிலைமை அங்கு மாறிவிட்டது என்றார்.