Take a fresh look at your lifestyle.

தேவர் மகன் 2 படத்தை எடுக்க நான் ரெடி: இயக்குனர் முத்தையா தகவல்

182

தேவர் மகன் 2 படத்தை எடுக்க நான் ரெடி: இயக்குனர் முத்தையா தகவல்
கமல் நடிப்பில் தேவர் மகன்-2 படத்தை இயக்குவது என் வாழ்நாள்கனவு என்று இயக்குனர் முத்தையா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கொம்பன் படம் ரிலீஸ் ஆன நேரத்தில்
தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி என்னை சந்தித்து தேவர் மகன்-2 படத்தை நீங்க தான் எடுக்கணும் என சொன்னார்.நான் கொஞ்சம் தயக்கத்துடன் நான் எடுத்தா, நல்லா இருக்குமா?,என கேட்டேன். கமல் ஓகே சொன்னால் நான் எடுக்க தயார் என கூறினேன்.இப்போது கதை ஆரம்பகட்ட பேச்சு வார்த்தையில் இருக்கிறது. கமல் இல்லாமல் இந்த படம் சாத்தியமில்லை. சக்திவேலுவுக்கு ஒரு மகள் பிறந்து வளர்ந்தால் எப்படி இருக்கும் என்பது போல் கதையை மாற்றலாம். கமலை வைத்து ‘தேவர் மகன்-2’ படம் இயக்குவது என் வாழ்நாள் கனவு என்றார்.