Take a fresh look at your lifestyle.

தனுஷ்-மிருணாள் காதல் கிசுகிசு, பிசுபிசு ஆனது: பார்த்திபன் கமெண்ட்

114

தனுஷ்-மிருணாள் காதல் கிசுகிசு, பிசுபிசு ஆனது: பார்த்திபன் கமெண்ட்
தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தில் பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் டப்பிங் முடித்த நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், ‘இட்லி கடை’யில் ஒரு சிறுமினி இட்லியாக கவுரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். இருப்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு எறும்பினும் சுறுசுறுப்பாய் உழைப்போடு சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மீறினால் (மிருணாள் என தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.ஏனெனில் அதுதான் பிசு பிசுத்த கிசுகிசுவாய்போய் விட்டதே) அது ஆச்சரியமில்லை என்பதை கண்கூடாக கண்டேன். இட்லி கடையில் அக்டோபரில் வெந்து விடும்,சாரி வந்து விடும்.