Take a fresh look at your lifestyle.

தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்

44

 

தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்

தமிழ்நாட்டில் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேறு கடையில் பணி அமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. மூடப்பட்ட கடை அருகே விற்பனை அதிகமாக உள்ள கடைகளில் பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊழியர்களை காலி பணியிடங்கள் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணி அமர்த்தவும், இதன் பிறகும் பணியாளர்கள் மீதம் இருந்தால் டாஸ்மாக் கிடங்கிலும் பணியமர்த்தவும்,பணி மூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து வேறு கடைகளில் பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் – மாற்றுப்பணி அறிவிப்பு ,

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களை, பணி மூப்பு அடிப்படையில் மற்ற கடைகளுக்கும், கிடங்குகளுக்கும் இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு முன்னதாக, கோயில்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்தார் முதலமைச்சர் விஜய்