விஜய் பிறந்தநாள்: மெர்சல் ரீ ரிலீஸ்
விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் மெர்சல். இப்படத்தை அட்லீ இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி தயாரித்திருந்தார். இப்படம் இந்நிறுவனத்தின் நூறாவது படமாக வெளியானது. முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 19ம் தேதி மெர்சல் படம் ரீரிலீஸ் ஆக உள்ளது. இதை கே.பி.பிரியங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே .கெண்ணடி வெளியிடுகிறார். ஏற்கனவே விஜய் நடித்த கில்லி, தெறி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் முதல்வர் ஆன பிறகு வெளியாகும் படம் என்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
Prev Post
Next Post