‘பீப்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் பஞ்சாப் நடிகை
எம் குவெஸ்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ .இல.சண்முக சுந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பஞ்சாப்பை சேர்ந்த பிரேர்ணா கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யாமினி,பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு பிரசாந்த் விஹாரி இசையமைக்க, பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து,வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஜெனீஷின் ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது.
Prev Post