Take a fresh look at your lifestyle.

தேவதையாக மாறிய சித்தி இத்னாணி

5

தேவதையாக மாறிய சித்தி இத்னாணி
“வெந்து தணிந்தது காடு” படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சித்தி இத்னாணி.அதன்பிறகு ஆர்யாவின் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”, அருண் விஜயின் “ரெட்டை தல” ஆகிய படங்களில் நடித்த இவர், தற்போது அறிவியல் பேண்டஸி படமாக உருவாகி வரும் “ட்ரோன்ஸ்” என்ற படத்தில் கதை கதாநாயகியாக நடிக்கிறார்.பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் இதில் சித்தி இத்னாணி தேவதையாகவும், தேவதர்ஷினி மந்திரவாதியாகவும், குரேசி விஞ்ஞானியாகவும் நடிக்கின்றனர். “பன் பட்டர் ஜாம்” படத்தை இயக்கிய ஆர்.ராகவ் இப்படத்தை இயக்குகிறார். உடம்ப பற்றி இயக்குனர் கூறுகையில், இப்படத்தின் கதை ஒரே ஜானருக்குள் அடங்காது என்றும், இதில் விஞ்ஞானிகள், தேவதைகள் மந்திரவாதிகள் மற்றும் துப்பறிவாளர்கள் என பல கேரக்டர்கள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் இதில் நகைச்சுவை முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.