Take a fresh look at your lifestyle.

டிவி பிரபலங்கள் நடிக்கும் புதிய படம்

6

டிவி பிரபலங்கள் நடிக்கும் புதிய படம்
யுனிவர்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது.இந்த விழாவில் ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனர் எஸ். தணிகை வேல் மற்றும் சமூக ஆர்வலர் மதிச்சியம் ஏ. கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படத்தை துவக்கி வைத்தார்.இந்த படத்தில் டிவி பிரபலங்கள் முத்துக்குமார், புகழ், சென்ட்ராயன், ராமர், சரத், அஜய் ராஜ், பவேல் நவகீதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் மதன் துரை படத்தை இயக்குகிறார். இவர் விஜய் டிவியில், அது இது எது, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், சிக்ஸர், சட்டம் என் கையில் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார்.