தாய் கிழவி ஹிட்டுக்கு எஸ்கே தான் காரணம்
ஏசியன் சினிமாஸ் சார்பில் சூரியகலா, சந்திரமூர்த்தி தயாரிப்பில் ஜெகன் ராயன் இயக்கி உள்ள படம் ‘ரூம்பாய்’.இதில் நிகில்,ஹீரோவாக நடிக்க,ஹர்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். வேலன் சகாதேவன் இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்க புதிய தலைவர் ஜி கே எம் தமிழ் குமரன், செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, பி எல் தேனப்பன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கதிரேசன் பேசியது, இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள், பெரிய ஹீரோ சின்ன படங்களை புரமோட் செய்தால் அது பெரிய அளவில் ரீச் ஆகும். தாய் கிழவி படத்தை சிவகார்த்திகேயன் எடுத்ததால் தான் இவ்வளவு பெரிய ரீச் அண்ட் சக்சஸ். எனவே சின்ன படங்களுக்கு முன்னணி ஹீரோக்கள் உதவ வேண்டும் என்றார்.