“ஏன் என்னை ஏதோ செய்தாய்” பட டீசர் வெளியீடு
டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில், ஒளியும் ஒலியும் இணைந்து சொல்லப்படும் எபிக் காதல் கதையாக உருவாகியுள்ளது. ஆண்டனிஸ் அட்லீயர் நிறுவனம் தயாரித்துள்ள இதில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்ய , பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். ஜோயி ரிடா பின்னணி இசைமைத்துள்ளார். தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 21ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
Prev Post