3 நாளில் 11 கோடியை குவித்த வித் லவ்
அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்துள்ள ‘வித் லவ்’ படம் கடந்த 6ம் தேதி ரிலீஸ் ஆனது. இதில் ஹீரோயினாக அனஸ்வர ராஜன் நடிக்க, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.இந்த படத்தை எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். பள்ளிப் பருவ காதலை மையமாக வைத்து வெளியான இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சியாக ஓடிக்கொண்டிருக் கிறது. இந்த நிலையில் படம் வெளியாகி உலகம் முழுவதும் 3 நாட்களில் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Prev Post