‘ த்ரிஷ்யம் 4’ வருமா?”: இயக்குநர் ஜீத்து ஜோசஃப் பளிச் பதில்
இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தற்போது ‘த்ரிஷ்யம் 3’ படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது.மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தொடரின் முதல் இரண்டு பாகங்களுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் போது, ‘த்ரிஷ்யம்’ படத்தின் 4ம் பாகம் உருவாகுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்குப் பதிலளித்த ஜீத்து ஜோசஃப், “என்னுடைய கனவில்கூட நான் அதை நினைத்துப் பார்க்கவில்லை. நான் இக்கதையை முடிக்கவே நினைக்கி றேன்.மக்களும் கதையை முடிக்கச் சொல்லி தான் என்னிடம் கேட்கிறார்கள்” என்றார்.