Take a fresh look at your lifestyle.

ரஜினி,கமல் படத்தில் ஹீரோ யாரு: ப்ரோமோ வீடியோ செம வைரல்

79

ரஜினி,கமல் படத்தில் ஹீரோ யாரு: ப்ரோமோ வீடியோ செம வைரல்
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் இருவரும் 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்க,ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதல் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலையில் இதன் 2 நிமிட புரோமோ வீடியோ நேற்று பகல் 12.7 மணிக்கு வெளியிடப் பட்டது. அந்த டீசரில் கமல் மற்றும் ரஜினி இருவரும் ரெட்ரோ லுக்கில் தோன்று கின்றனர். பாஷான கார் செட்டில் இருந்து கோட் சூட் அணிந்தபடி இருவரும் காரில் துவங்கும் போது இந்த படத்துக்கு யார் ஹீரோ என்று இருவரும் நெல்சன் இடம் கேட்பதோடு டீசர் முடிகிறது. தியேட்டரிலும் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த புரோமோ வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.