Take a fresh look at your lifestyle.

மிஷ்கினை பார்த்தால் ‘சைக்கோ’ மாதிரி இருக்கும்: விஜய் சேதுபதி ஓப்பன் டாக்

5

மிஷ்கினை பார்த்தால் ‘சைக்கோ’ மாதிரி இருக்கும்: விஜய் சேதுபதி ஓப்பன் டாக்(அல்லது)
டிரெயின் பட ஷூட்டிங் ஸ்பாட் ‘சேட்டு’ வீட்டு கல்யாணம் போல் இருக்கும்: விஜய் சேதுபதி கலகல பேச்சு:
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி,சுருதிஹாசன் நடித்துள்ள படம் ‘டிரெயின்’.இதில் நாசர்,நரேன், யூகிசேது, கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
மிஷ்கினே இசையும் அமைத்துள்ளார்.இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது.இதில் விஜய்சேதுபதி பேசியது,மிஷ்கினை பற்றி என்ன சொல்வது என்று எனக்கு தெரிய வில்லை.ஜூனியர் ஆர்டிஸ்டாக இருக்கும் போது இவரிடம் போய் இருக்கிறேன். அப்புறம் நான் ஹீரோ ஆன பிறகு ஒரு நாள் அழைத்தார். எனக்கு இவரை பார்த்தால் ‘சைக்கோ’ மாதிரி இருக்கும். அதனால் எதுக்குடா பிரச்சினை என நேராக அவரது அலுவலகம் சென்று மன்னித்துக் விடுங்கள் தேதி இல்லை என சொல்லி விட்டு வந்து விட்டேன். அதற்கப்புறம் சைக்கோ படம் பார்த்த பிறகு மிஷ்கினை ரொம்ப பிடித்து விட்டது.அதன் பிறகு அவருக்கு போன் பண்ணினேன்.உங்கள் படம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என சொன்னேன்.அடுத்ததாக ‘பிசாசு 2’ படத்தில் ஒரு சின்ன ரோலில் 2 நாள் நடித்தேன். அதற்கு பிறகு தான் ‘டிரெயின்’ படம் ஸ்டார்ட் பண்ணினோம். இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட் எப்போதும் ‘சேட்டு’ வீட்டு கல்யாணம் போல் கலகலவென இருக்கும். மிஷ்கின் அற்புதமான விஷயம் ஒன்று பண்ணினார். வெறும் ரூ.2 ஆயிரம் செலவு பண்ணினார். படப்பிடிப்பு தளத்தில் வேலை பிரமாதமாக நடந்தது.நல்லா நடிக்கிற ஜூனியர் ஆர்டிஸ்டுக்கு ரூ.1000 பரிசு நல்லா வேலை செய்கிற டெக்னீசியனுக்கு ரூ.1000 பரிசு. என்ன சொன்னார். இதற்காகவே அனைவரும் நன்றாக வேலை பார்த்தனர். பணம் பெரிதல்ல. வேலை செய்கிற ஆட்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்.
ஒவ்வொரு சீனும் நடித்த பின் நன்றாக இருந்தால் கிளாப் பண்ணுவார். இவருடன் படத்தில் பயணித்தது ரொமாண்டிக்காக இருந்தது என கூறி மிஷ்கினை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.