பிகினி உடை அணிவதில் என்ன தவறு:மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் பிசியான படப்பிடிப்புகளுக்கு இடையே தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினி அணிந்தபடி எடுத்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங் களுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியது,நமது நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மதிப்பதற்கு எங்களுக்கும் தெரியும். எல்லை மீறிய கவர்ச்சி என்பது நடிகைகளுக்கு தெரியும். பிகினி உடை அணிவதில் என்ன தவறு. வெளிநாடுகளில் நீச்சல் உடை அணிவது மிகவும் சாதாரண விஷயம். அதனால் எளிதாக யாரையும் விமர்சிக்காதீர்கள் என கூறியுள்ளார்.
Prev Post
Next Post