சிம்பு படங்களில் எனக்கு பிடித்தது விடிவி தான்:டிஆர்
சிம்பு பிறந்தநாளைத் முன்னிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப் படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான சிலம்பாட்டம் படம் வரும் 6 ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
மறுவெளியீட்டை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், இயக்குநர் சரவணன்,இயக்குநர் டி.ராஜேந்தர் மற்றும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் டி. ராஜேந்தர் பேசியது, என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா.அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட் டது.அது போல இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.
Prev Post