விஜயகாந்த் இடத்தில் விமல் தான்: ஆர்.வி.உதயகுமார்
எழில் இயக்கத்தில் மீண்டும் விமல் நடித்துள்ள படம் தேசிங்குராஜா-2 . இதில் புகழ், ஆர்.வி.உதயகுமார்,சாம்ஸ், சிங்கம்
புலி, ரோபோ சங்கர், திருச்சி சாதனா,
ரவிமரியா, ஹர்ஷிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இன்பினிட்டி கிரியேஷன்ஸ்
நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு
வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.வரும் 11-ந்தேதி படம் ரிலீஸ் ஆகிறது.இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசியது, எங்கள் காலங்களில் இருந்த ஹீரோக்களில் வெள்ளந்தியாக பேசக்கூடியவர் நடிகர் விஜயகாந்த் தான். அவருக்கு அடுத்ததாக நான் இப்போது பார்க்க கூடியவர் நடிகர் விமல் தான். எல்லாவற்றையும் அரவணைத்து போகக் கூடிய மனப்பான்மை கொண்ட விமலுக்கு தோல்வி என்பது கிடையாது. இந்த படம் வெற்றி படமாக அமையும் என்றார்.
Next Post