விஜய்யின் ‘தெறி’ படம் வரும் 23ல் ரீ ரிலீஸ்
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தெறி படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது.இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்க, அட்லி இயக்கி இருந்தார். தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு தெறி படம் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகி விஜய் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இப்பம் பொங்கலை ஒட்டி கடந்த 15ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தியேட்டர்கள் கிடைக்காததால் இந்த வாரம் வெளியாகிறது.
Prev Post
Next Post