ஹீரோவாகும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்
முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இயக்குனரான ஜேசன் சஞ்சய், அடுத்து நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார்.அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் ஜி. கே.எம்.தமிழ் குமரன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள ‘சிக்மா’ படத்தை தமிழ்குமரன் தலைவராக இருக்கும் லைகா
புரொடக்ஷன்ஸ் தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த விஜய், அரசியல் கட்சி தொடங்கி சினிமாவை விட்டு விலகி நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் அவரது மகன் ஹீரோவாக என்ட்ரி ஆக உள்ளார்.
Next Post