விஜய் ஆண்டனி படம் ரிலீஸ் தேதி மாற்றம்
விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் ஆண்டனி கேங்ஸ்டராக நடித்துள்ளார். முன்னதாக, இப்படத்தின் டீசர், 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப் பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.இது தொடர்பான புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
Prev Post
Next Post